விழுப்புரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டத்தில் பரபரப்புADMKகவுன்சிலர் பதவியை ராஜினாமா

ஒன்றாவது வார்டு உள்ளிட்ட பல வார்டுகளில் குடிநீர், பாதாள சாக்கடை, சாலை போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என கூறி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1வது வார்டு உறுப்பினர் கோல்ட் சேகர் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்க முயன்றார்.

அப்போது அவருக்கு பேச வாய்ப்பு வழங்காமல் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோல்ட் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால், விழுப்புரம் நகராட்சியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Exit mobile version