கரூர் மாவட்டத்தில் நியூஸ் தமிழ் நிருபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தில் முதல் முதலாக ஆர்ப்பாட்டத்தில் குதித்த திருப்பத்தூர் மாவட்ட பிரஸ் கிளப்
கரூர் மாவட்டம் கிருஷ்ணாயபுரம் சிவாயம் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த குவாரியில் அரசு அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாக கூறி திருச்சி மாவட்ட நியூஸ் தமிழ் நிருபர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் செய்தி சேகரிக்க சென்றபோது திமுக எம்எல்ஏ பழனியான்டியின் குண்டர்கள் ஒன்றிணைந்து செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை அடித்து உதைத்து ஒரு மணி நேரமாக கடத்தி வைத்திருந்தனர்
மேலும் அவர்களின் செல்போன் மற்றும் கேமராக்களை பிடுங்கி வைத்துக்கொண்டு மிரட்டி வந்துள்ளனர்.
அப்போது குண்டர்கள் தாக்கியதில் செய்தியாளர்களுக்கு தலையில் காயமும் ஒளிப்பதிவாளருக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி சார்பில் கண்டனங்கள் எழுப்பிய நிலையில் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீட்கப்பட்டனர்.
இதன் காரணமாக தமிழகத்திலேயே முதன் முதலாக திருப்பத்தூர் மாவட்ட பிரஸ் கிளப் மூலம் கண்டன அறிக்கையும் அதேபோல
நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வரும் கரூர் மாவட்ட கனிமவளக் கொள்ளை கும்பல் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

















