தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், கூடுதல் இடங்கள் கேட்போம். ஆனால் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது, நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கண்டித்து வீரபாண்டியன் மயிலாடுதுறையில் பேட்டி :-
வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்தி, அதன் அதிபரை கைது செய்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மயிலாடுதுறை வந்திருந்த அக்கட்சியின் மாநில செயலாளர் திரு வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அமெரிக்கா ஏகாதிபத்தியம் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி அதிபரை கைது செய்துள்ளது மிகப்பெரும் ஜனநாயக படுகொலை ஆகும். இதனை இந்தியா கண்டுக்காமல் கவலைப்படுவதாக தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது. மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் தன்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த வீரபாண்டியன் இதுகுறித்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது தவறான ஒன்று என்று தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை தாங்கள் கேட்டு பெறுவோம் என்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். தமிழக அரசு அறிவித்துள்ள பென்ஷன் திட்டம் புதிய பென்ஷன் திட்டத்தை விட கூடுதல் பலன்கள் கொண்டது, ஆனால் அதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்றும் ஆட்சியில் தவறு நடக்கும் பட்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதாக தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா ஒரு கார்ப்பரேட் விழாவாக அமைந்திருந்தது. ஒரிசாவில் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசிய அமித்ஷா, தேர்தலுக்காக தமிழர் விழாவில் பங்கேற்கிறார். இதில் தமிழர் குறித்து தவறாக பேசியதற்கு ஒரு வருத்தம் கூட அவர் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது ஆயிரம் அமித்ஷாக்கள் ஆயிரம் மோடிகள் வந்தாலும் தங்கள் கூட்டணியை தோற்கடிக்க முடியாது, தமிழக மக்கள் பிரிவினைவாத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு கொடுக்கப்படும் இடங்கள் குறைவாக இருந்தாலும் அவர்களை கடந்து சென்றுள்ள முடியாது என்பது வாக்காளர்களுக்கு நன்கு தெரியும் என்று தெரிவித்த அவர், நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது, என்று கூறினார்

















