சீர்காழியில்TVKமாவட்ட மகளிர்அணி இணைஅமைப்பாளர்கள் நியமனத்தில் குளறுபடி புதிய பட்டியலை அறிவித்ததாக குற்றச்சாட்டு

சீர்காழியில் த.வெ.க மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் நியமனத்தில் குளறுபடி. மகளிர் அணி அமைப்பாளர், தலைமை அறிவித்த பட்டியலிருந்து 7 பேரை நீக்கி, தனக்கு ஆதரவான ஏழு நபர்களை இணைத்து புதிய பட்டியலை தலைமை அறிவித்ததாக வெளியிட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக வெற்றி கழகம் மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மற்றும் 10 இணை அமைப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு தமிழக வெற்றி கழகம் தலைமை அறிவித்து அண்மையில் பட்டியல் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தலைமை அறிவித்த மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் பட்டியலில் இருந்து 7 பேரை நீக்கி மாவட்ட அமைப்பாளர் தனலட்சுமி தனக்கு ஆதரவான மாற்று 7 மகளிரின் பெயர்களை சேர்த்து தலைமை அறிவித்த பட்டியலாக மாற்றி அமைத்த பட்டியலை வெளியிட்டதாகவும், மாற்றி அறிவித்துக் கொண்ட பட்டியலில் உள்ளவர்களின் புகைப்படங்களுடன் மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் டிஜிட்டல் பதாகைகள் அமைத்துள்ளதாக இணை அமைப்பாளர் சசிகலா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி மற்றும் த.வெ.க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் குட்டி கோபி. ஆகியோர் மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்துள்ளது மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version