மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, புத்தூர் ஆகிய நான்கு அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம், தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்று போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரி, குத்தாலம் அரசு கலைக்கல்லூரி, மணல்மேடு அரசு கலைக்கல்லூரி, புத்தூர் அரசு கலைக் கல்லூரி ஆகிய நான்கு அரசு கலைக் கல்லூரிகள் அமைந்துள்ளன. அரசு கலைக் கல்லூரிகளில் 4000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இங்கே 200க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர் இவர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ள சம்பளம் வழங்கப்படாமல் குறைந்தபட்ச தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ள 57 ஆயிரத்து 800 ரூபாய் மாதம் ஊதியம் வழங்க வலியுறுத்தியும், இது தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியும், பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மகப்பேறு விடுப்பு வழங்க வலியுறுத்தியும், வருங்கால வைப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நான்கு அரசு கலைக் கல்லூரிகளிலும், கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தங்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் வரை தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் காலவரையற்று நடைபெறும் என்றும் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டது.














