மயிலாடுதுறையில் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

பாமகவில் அன்புமணி தலைவராக தொடரலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து மயிலாடுதுறையில் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமகவில் தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மருத்துவர் ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டு அணிகளாக பாமகவினர் செயல்பட்டு வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை பாமகவிலிருந்து நீக்கியது. இந்த நிலையில இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி நீக்கப்பட்டது செல்லாது எனவும் அவர் தலைவர் பதவி வகிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது. இதனை வரவேற்று பாமகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமையில் பாமகவினர் பட்டாசு வெடித்தும் பேருந்து பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக கோஷங்களை எழுப்பினர்.

Exit mobile version