மயிலாடுதுறை அருகே போலி வாரிசு சான்றிதழ், போலி ஆவணம் மூலம் முறைகேடான முறையில் நிலம் விற்பனை:- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு:-
மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள்பேட்டை கிராமத்தை சேர்ந்த குருசாமி-ராமுஅம்மாள் தம்பதிக்கு சொந்தமான மாணிக்கப்பங்கு கிராமத்தில் உள்ள பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை, அவர்களுக்கு வாரிசுதாரர்களாக மகன்கள் மற்றும் மகள்கள் 7 பேர் உள்ள நிலையில், மகன் நடராஜன் என்பவர், தம்பதிக்கு தான் மட்டும்தான் ஒரே வாரிசு என போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்து, 7 பேருக்கு சொந்தமான அந்த சொத்தினை போலி ஆவணம் மூலம் பட்டா பெற்று கடந்த வருடம் வேறொருவரிடம் விற்று, தரங்கம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், குருசாமி-ராமுஅம்மாள் தம்பதியின் வாரிசுதாரர்களில் ஒருவரின் பேரன் ராஜ்குமார் என்பவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் முறைகேடாக பெறப்பட்ட நில ஆவணம் மற்றும் பட்டாவை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்