இன்று தமிழக அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பெரும்பாலும் தமிழ்வழியில் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் மாணவர்கள் லட்சியத்தோடு படிக்க வேண்டும் பள்ளி கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழாவில் என விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா பேச்சு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட முட்டத்தூரில் ஓய்க்காப் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக ரூபாய் 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைகளை விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா இன்று திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்
அதனை தொடர்ந்து அந்தப் பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் 128 பேர்க்கு விலை இல்லா மிதிவண்டினை வழங்கினார்
இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய எம்எல்ஏ அன்னியூர் சிவா இன்று தமிழக அரசு உயர் பதவிகளில் உள்ள பல ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு பள்ளியில் படித்து உயர்ந்தவர்கள் தான் என்று பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களை சுட்டிக்காட்டி, மாணவர்கள் இலட்சியத்தோடு படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
மேலும் அந்த பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் வினாடி வினா கையேட்டினையும் அன்னியூர் சிவா வழங்கினார்

















