டி.டிவி தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான் முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தேன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் பேட்டி .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னார்குடி சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் திறந்து வைத்தார் .அதன் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது கடந்த 10ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பதவி ஏற்றுகொண்டார் 11ஆம் தேதி 234 சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டோம் பிறகு சபாநாயகர் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது பிறகு என்னைப் பேச அழைத்தார்கள் முதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகியோரை வாழ்த்தி பேசினேன் எனது செல்போன்கள் காரில் இருந்தது சட்டமன்றத்தில் வெளியே வந்த போது கட்சியிலிருந்து உங்களை நீக்கியதாக தகவல் சொன்னார்கள் அதன் பிறகு டி.டி.வி தினகரன் கட்சியை விட்டு
நீக்கிவிட்ட பிறகு நான் யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை முதல்வர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் நான் எந்த கட்சியிலும் இல்லை அதனால் அவருக்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்தேன் இது தவறு இல்லை என்பதை நான் தெரிவிக்கிறேன் என்னிடம் யாரும் குதிரை பேரம் பேசவில்லை டிடிவி தினகரன் கவர்னர் ஆகியோர் நேரில் இருந்தார்கள் அப்போது கவர்னர் முன்னிலையில் பேசப்பட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டோம் சரியாக இருந்ததற்காக கவர்னர் சான்றிதழும் வழங்கியுள்ளார் என்பதை நான் அனைத்து ஊடகத்திலும் சொல்லிவிட்டேன் அந்த மாதிரியான குதிரை பேரும் யாரிடமும் நான் பேசவில்லை என்னிடமும் யாரும் பேசவில்லை அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்க வேண்டாம்.
