திருப்பத்தூரில் வக்ஃபு வாரிய சொத்துக்களை மசூதி முத்தவல்லிகள் விற்று விட்டதாக பிறந்த புகாரை தற்போது தான் கேள்விப்பட்டேன். ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொஜோ அருண் சசே தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

இதுவரை நாங்கள் மேற்கொண்ட 33 மாவட்டங்களில் 939 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் 771 அந்தந்த மாவட்டத்தில் நடத்தக்கூடிய சிறுபான்மையினர் ஆய்வுக் கூட்டத்திலேயே தீர்வு கண்டு உள்ளோம்.

மேலும் மாவட்ட ஆட்சியர் துறையிலும் மாவட்ட காவல் துறையிலும் சிறுபான்மையினருக்கு வழங்கக்கூடிய சிறுபான்மை ஆணைத்தின் சார்பாக சிறுபான்மையர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சிறுபான்மை மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் அதற்கான ஆய்வுகளை சரியாக செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருந்தார்

சென்னையில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் 38 மாவட்டத்திற்கு சென்று சிறுபான்மை குறைகளை தீர்வு கண்டிருக்கிறோம் என்றால் இந்த ஆணையம் தான் என பெருமிதமாக கூறினார்

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பொழுது அவர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கினார்கள் அதில் 70% அப்பொழுதே தீர்வு கண்டுள்ளோம் என தெரிவித்தார்

தனிநபர் நிலங்கள் அபகரிக்கப்படுகிறது என தெரிவித்தார்கள் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் என கூறினார்

சிறுபான்மையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒரு வாரத்திற்குள் அனைத்தையும் செய்து கொடுப்போம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததின் பெயரில் நாங்களும் சிறுபான்மையின் மூலம் ஒரு குழுவை அமைத்து மேற்பார்வைக் கொண்டு செயல்படுத்துகிறாரா இல்லை என பார்வையிடுவோம் என தெரிவித்தார்

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மசூதிக்கு சொந்தமான வகுப்பு வாரிய சொத்துக்களை மசூதியின் முத்தவல்லிகள் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு 200 கோடிக்கு மேலாக சொத்துக்களை பெற்றது சம்பந்தமாக புகாரை தற்போது தான் கேள்விப்பட்டேன் இதற்கு ஐந்து நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை தயார் செய்து வழங்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறேன். எனவும் தெரிவித்தார்.

இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசவந்தரவல்லி மற்றும் இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த தலைவர்கள், சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்

Exit mobile version