மத்திய அரசு சமீபத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதோடு திட்டத்திற்கு நிதியை மத்திய அரசின் பங்களிப்பு 75 சதவீதம் எனவும் மாநில அரசின் பங்களிப்பு 25 சதவீதம் எனவும் மாற்றி அமைத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தியும் புதிய சட்ட திருத்தத்தை திரும்ப வேற வலியுறுத்தியும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

















