சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்……..

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி முதல் . பெரும்பொங்கல் மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு கார் போன்ற இருசக்கர வாகனங்களில் செல்லத் தொடங்கி விட்டனர்.

தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட இருக்கும் மக்கள் நாளை போகி பண்டிகை கொண்டாட இருக்கிறார்கள் இதையொட்டி, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறையும் அளிக்கப்பட உள்ளது. இதனால் சொந்த ஊருக்கு முன்கூட்டியே படையெடுக்க தொடங்கியுள்ளனர் இதனால் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் . ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நாளை முதல் கொண்டாட இருப்பதால் சென்னையில் உள்ள மக்கள் இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர் இதனால் வண்டலூர் கிளாம்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி சிங்கப்பெருமாள் கோவில் செங்கல்பட்டு சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது .

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த செங்கல்பட்டு பரனுர் சுங்கச் சாவடியில் சிறப்பு காவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version