சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னையில் 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, பதிவுமூப்பு இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும், முக்கியமான இடத்தில் ஒன்று கூடி, அவர்கள் அரசின் கவனத்தை ஈர்த்து போராட்டம் நடத்துகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ஏராளமான ஆசிரியர்கள் ஒன்றுகூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது ஒற்றை கோரிக்கையை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

















