மன்னார்குடி அருகே அரசுபள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்த்தில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு தப்பி ஓடிய ஆசிரியரை காவல்துறையினர் தேடிவருகின்றனர் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதியிலிருந்து மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மன்னார்குடியை பைபாஸ் ரோடு பகுதியைசேர்ந்த தற்காலிக உடற்பயிற்சி ஆசிரியராக முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது கால்பந்து விளையாட்டிற்காக மாணவிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக பயிற்சி அளித்து வந்துள்ளார். அப்போது 9 வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பயிற்சி கொடுக்கும் போது இரட்டை அர்த்ததில் பேசி மாணவிகளின் மனதை தூண்டி உள்ளார். இதனால் மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்கள். உடனடியாக மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்காலிக உடற்பயிற்சி ஆசிரியர் முத்துகுமார் மீது பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் படிக்கும் பள்ளிக்கு நேரடியாக சென்று புகார் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் சக மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையின் அடிப்படையில் அரசு பள்ளியில் தற்காலிகமாக பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் மீது மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . விசாரணை செய்வதை தெரிந்து கொண்ட முத்துக்குமார் தப்பிிஓடிவிட்டார் . தப்பி ஒடிய முத்துகுமாரை காவல்துறையினர் தேடிவருகின்றனர் .ஆசிரியர் முத்துக்குமார் ஏற்கனவே காதல் திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி பிரிந்துள்ள நிலையில் தற்பொழுது மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி சில்மிஷம் செய்தவிஷயத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மற்றும் இவரிடம் பயிற்சி பெற்று காவல்துறையில் பணியாற்றிவரும் பெண்களின் ஏடிஎம் கார்டை இவர் வைத்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
















