திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் சிறப்பு பூஜை நடத்தும் நிகழ்வு

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்தல் என்ற சிறப்பு பூஜை நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்றதும், 3 தீர்த்தம், 3 மூர்த்திகள், 3 அம்பாள் அமையப்பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இப்போது நவகிரகங்களில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார் எத்தகைய பிரசித்தி பெற்ற கோவிலில் பொங்கல் தினத்திற்கு மறுநாள் தனது கணவரான சிவபெருமான் நலமுடன் இருக்க பார்வதி தேவி கணு வைத்தல் என்ற சிறப்பு பூஜைகளை நடத்தியதாக ஐதீகம் ஒவ்வொரு ஆண்டும் இந்த கணு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதனை ஒட்டி கோவிலில் சந்திர தீர்த்தக்கரையில் கலசத்தில் சுக்கிரவார அம்மனை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் செய்து வைக்கப்பட்டு குங்குமம் மஞ்சள் கலந்த அரிசியை பொங்கலிட்டு, செங்கரும்புடன் சௌபாக்கிய பொருட்களான மஞ்சள் குங்குமம் கண்ணாடி சீப்பு முதலியவற்றை வைத்து அம்பாளுக்கு நைவேத்தியம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்ற பின்னர் கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை அம்பாளுக்கும் பின்னர் பூஜைகள் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புரோக்சனம் செய்யப்பட்டது. திரளான பெண்கள் கலந்து கொண்டு சௌபாக்கியம் வேண்டி அம்பாளை பிரார்த்தித்தனர்.

Exit mobile version