தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்தே அமெரிக்காவிற்குள் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக கூறி, அந்நாட்டில் இருந்து எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல்களை அமெரிக்கா கடற்படை தடுத்து வருகிறது.
இதன்படி ரஷ்யாவிற்கு சொந்தமான பெல்லா 1 என்ற எண்ணெய் டேங்கர் கப்பலை பறிமுதல் செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டி வந்தது. ஆனால், ரஷ்யா மரினேரா என பெயர் மாற்றி தன் நாட்டுக்கொடியை ஏற்றி பாதுகாப்பு அளித்துய் வந்தது.
அதனையும் மீறி, நேற்று முன்தினம் வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்த எண்ணெய் டேங்கர் கப்பலை, அமெரிக்க கடற்படை கைப்பற்றியது. இந்த நடவடிக்கைக்கு, ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை சர்வதேச கடல் சட்டத்தின் மீறல் என கண்டித்துள்ள, ரஷ்ய வெளியுறவுத்துறை, இதே நிலை தொடர்ந்தால், அமெரிக்க கப்பல்களை மூழ்கடித்து விட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவின் அனு ஆயுத கொள்கைகப்படி பதிலடி கொடுக்க, தயாராக இருப்பதாகவும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

















