எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கருப்பு குடை பிடிப்பதும், ஆளுங்கட்சி ஆன பிறகு வெள்ளை குடை காட்டி வரவேற்பு செய்வதும் திமுகவின் வாடிக்கை, மூன்று ஆண்டுகள் நிதி ஆயக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், ஒரு இ டி ரைடு வந்ததும் வேண்டாம் இடி வருகிற மோடி என்று சென்றவர்கள் தான் இவர்கள், திமுக குறித்து சீமான் கடும் விமர்சனம் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியாரைப் போற்றுவோம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும் பொழுது மாற்றுக்கருத்தை கருத்தாக எதிர்கொள்கின்ற முதிர்ந்த பண்பு திராவிட இயக்கத்தினரிடம் இல்லை, தமிழர் கழகம் என்று தொடங்க இருந்ததை திராவிடர் கழகம் என்று ஏன் தொடங்கப்பட்டது? என்ற கேள்வி எழுப்பிய சீமான் பதவிக்காக தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நஞ்சுில்லாமல் உணவு அளித்த நம்மாழ்வார் பெரியார் நெல் ஜெயராமன் பெரியார், கீழப்பளூர் சின்னசாமி தாளமுத்து நடராஜன் ஆகியோர் பெரியார், தமிழ் இறந்து விடக்கூடாது என்று தனது உயிரை நீத்தவர்கள் பெரியார் என்று பெரிய பட்டியல் வாசித்தார்.
நாம் தமிழர் கட்சியை பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் என்று விமர்சிப்பது குறித்து பேசிய அவர், திமுக 1962 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முன்னோடியான ஜன சங்கத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது, தொடர்ந்து ராஜாஜியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆக திமுக ஏ.டீமாக உள்ளது. ஆரியப் பெண் எனப்படும் செல்வி ஜெயலலிதா பாரதிய ஜனதா ஆட்சியை கவிழ்த்தபொழுது ஐந்து ஆண்டுகள் முட்டுக் கொடுத்து தூக்கி விட்டது யார்? திராவிட கழகம் போல ஆர்எஸ்எஸ் ஒரு கொள்கை இயக்கம் என்று விளக்கம் கொடுத்தது யார்? பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்நாத் சிங்கை அழைத்து நாணயம் வெளியிட்டார்கள். மூன்று ஆண்டுகள் நிதி ஆயக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு ஒரு இ டி ரைடு வந்ததும், வேண்டாம் இடி வருகிறோம் மோடி என்று ஓடி சென்றவர்கள் இவர்கள் . இவர்கள்தான் ஏடீம் என்று பேசினார். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கோ பேக் மோடி என்று சொல்லி கருப்பு குடை பிடிப்பதும், ஆளுங்கட்சி ஆன பிறகு வெள்ளை குடை பிடித்து வரவேற்பு தெரிவிப்பதும் இவர்கள் வாடிக்கை என்று திமுகவை கடுமையாக குற்றம் சாட்டி பேசினார். தொடர்ந்து மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் திருவிடைமருதூர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார்.
பூம்புகார் இளைய நகுலன், மயிலாடுதுறை சமூக செயல்பாட்டாளர் காசிராமன்,
சீர்காழி அம்பேத்ராஜன்
திருவிடைமருதூர் திவ்யபாரதி ஆகியோர் போட்டியிடுவதாக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். திமுக அதிமுக தமிழக வெற்றி கழகம் ஆகியவை திராவிடம் என்ற குடையின் கீழ் இருப்பதாகவும், நாம் தமிழர் என்ற இடத்தில் நாம் இருக்கிறோம் எது தேவை என்பதை அறிவார்ந்த சமூகம் முடிவு செய்யும் என்று பேசி தனது உரையை நிறைவு செய்தார். விழாவில் ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

















