டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்-ஸை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து சென்னையில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.அப்போது, சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று அவர் பதில் அளித்தார்.
த.வெ.கவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என கேட்டதற்கு, கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று கூறிச்சென்றார்.

















