பி.ஜே.பி. தேசியத்தலைவர் நட்டாவின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய செயல் தலைவராக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு நடைமுறைகள் நேற்று நிறைவடைந்தன.
இதில் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் மட்டுமே களத்தில் இருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிஜேபி அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிதின் நபின் முறைப்படி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.அவருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் பிஜேபி மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
