கூத்தாநல்லூர் அருகே தாய் தந்தையை இழந்து பரிதவித்த குழந்தைகளுக்கு தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு கட்டித் தரப்பட்டு குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி வீடு திறக்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே நன்னிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மற்றும் சுமதி தம்பதியினர் இவர்களுக்கு சுவாதி மற்றும் ஸ்வேதா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் சிவேஸ்வர் என்ற நான்காம் வகுப்பு படிக்கும் ஆண் குழந்தையும் உள்ள நிலையில் சிவகுமாரின் மனைவி சுமதி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது மூன்று குழந்தைகளையும் சிவகுமார் தனியாக வளர்த்து வந்தார் இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிவகுமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கக்கூடிய இரண்டு பெண் குழந்தைகளும் நான்காம் வகுப்பு படிக்கக்கூடிய ஆண் குழந்தைகளும் முறையாக இருப்பிடம் இன்றியும் அன்றாட தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர் இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பாரதி மோகன் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் அந்த குழந்தைகளின் ஏழ்மையை நிலையை கருதி அவர்களுக்கு புதிய சிமெண்ட் சீட் கொண்ட வீடு மற்றும் பெண் குழந்தைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு புதிய குளியலறை, கழிவறை ,மற்றும் இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி தரப்பட்டது குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக வீடு கட்டப்பட்டு வந்த நிலையில் வீடு திறப்பு விழா காணும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த வீட்டினை சுவாதி ஸ்வேதா மற்றும் சிவேஸ்வர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் மேலும் அந்த குழந்தைகள் தங்களது தாய் தந்தையரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் பொழுது கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மேலும் இந்த பாரதி மோகன் அறக்கட்டளை சார்பாக நன்னிமங்கலத்தில் கட்டப்படுவது இருபதாவது வீடாகும் மேலும் பாரதி மோகன் அறக்கட்டளைக்கு அந்த ஊர் மக்கள் சார்பாகவும் அந்த குழந்தைகளின் சார்பாகவும் நன்றி தெரிவித்தனர்

















