திராவிட பொங்கல் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்டம் திமுக சார்பில் நகராட்சி திடலில் நடைபெற்ற கலை இலக்கிய திராவிட மாடல் கலை திருவிழா கொண்டாட்டத்தை மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரு. லட்சுமணன் பறை இசை அடித்து பொது மக்களை உற்சாகப்படுத்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் பரிசுகளை வழங்கினார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருான டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் , விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள, நகராட்சி திடலில் உழவர் திருநாள் – காணூம் பொங்கல் திருவிழாவை- முன்னிட்டு கலை இலக்கியத்தின் வாயிலாக திராவிட மாடல் கலை திருவிழா கொண்டாட்டத்தை பறை இசை அடித்து துவக்கி வைத்து, பொதுமக்களுடன் கலை நிகழ்ச்சியை கண்டு களித்து, நடன கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.புஷ்பராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
