நியூ யார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஸோரான் மம்தானி, நியூயார்க் நகர மேயராக தேர்வு செய்யப்பட்டார். இவர், வரலாற்று சிறப்புமிக்க, சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் மேயராகப் பதவியேற்றார். அப்போது, குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
உகாண்டாவின் கம்பாலாவில் 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் ஸோரான் மம்தானி. இந்தியாவில் சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மீரா நாயரின் மகன் இவர். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் குழந்தைப் பருவத்தை கழித்த ஸோரான், 7-வது வயதில் நியூ யார்க் நகருக்குப் பெற்றோர்களுடன் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
