பரிமளரெங்கநாதர் ஆலயத்தின் ஏகாதேசி பெருவிழாவின் இராப்பத்து 7ம் நாள் திருவிழாவில், பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருள ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடைபெற்றது, திரளான பக்தர்கள் வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், 108 வைணவ திவ்ய தேசங்களுல், 22வதும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல், 5வது தேசமுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சந்திரன், இந்திரன் உள்ளிட்டோர் வழிபட்டு, சாபம் நிவர்த்தியான ஆலயமான இங்கு, வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 20ம் தேதி திருநெடுந்தாண்டகம் துடன் துவங்கியது. இராப்பத்து விழாவின் 7ம் நாள் திருவிழாவில், பெருமாள் சர்வ அலங்காரத்தில் , பரமபதவாசல் வழியே எழுந்தருளினார். தொடர்ந்து, ஏகாந்த சேவையும், நம்மாழ்வார் சேவைசெய்யும் நிகழ்ச்சியும், உள்பிரகார வீதியுலாவும் நடைபெற்றது. அதனையடுத்து படியேற்ற சேவை நடைபெற்றது. இதில் தமிழ் பாசுரங்களை படி ஏற்றத்துடன் பக்தர்கள் பாடினர். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
