திருவாரூர் சாய்பாபா கோவிலில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலம் …….

திருவாரூர் சாய்பாபா கோவிலில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம் நடைபெற்றது.

இன்று நாடு முழுவதும் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு உழவுக்கு பயன்படும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் திருவாரூர் சாய்பாபாகோவில் பசுமடத்தில் மாடுகளுக்கு வண்ண மாலைகள் , நெட்டி மாலை அணிவித்து பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து பொங்கல் வைத்து மேளதாளம் முழங்க மாடுகளுக்கு உணவு அளித்து மாட்டுப்பொங்கல் வெகு விமர்சையாக நடைபெற்றது ,

தொடர்ந்து வைக்கோலில் நெருப்பு பற்றவைத்து மாடுகளுக்கு திருஷ்டி போக்கி மாட்டுப்பொங்கலை சிறப்பாக கொண்டாடினர் .

Exit mobile version