அனைத்து திங்கட்கிழமை நாட்களிலும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் நடைபெறும்நடைபெறும். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இன்று திங்கட்கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதுவகையான கோரிக்கை மனுவுடன் ஊர் பொதுமக்கள் அனைவரும் வந்தனர். அதில் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுக்கா பெருஞ்சீலம்பு ஊரில் தங்கள் முன்னோர்கள் முறைப்படி நிலங்களை வாங்கி சட்டத்துக்கு உட்பட்டு பத்திரப்பதிவு செய்து அந்த நிலத்திற்காக பட்டா வாங்கி சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பமாக வசித்து வருகின்றன இந்நிலையில் தற்போது அந்த நிலங்கள் இந்து அறநிலை துறை மறுப பத்திரப்பதிவு செய்ய தடை விதித்துள்ளது. இதனால் அப்பகுதியில் நிலங்கள் வாங்கவோ விற்கவோ முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தங்கள் வறுமையின் காரணமாக இடங்களை விற்க முடியாமல் சிரமப்படுவதாகவும், மேலும் கல்வி திருமணம் போன்றவைகளுக்கு வங்கிகளில் கடன் பெற முடியாத சூழலில் இருந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். தங்கள் நிலங்களுக்கு பட்டா இருந்தும் தற்போது புறம்போக்கு நிலத்தில் வசிப்பது போன்று நிலைமையை இந்து அறநிலையத்துறை உருவாக்கியுள்ளதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டினர்.இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பாக 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
















