ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர். இது, கூட்டணிக்கு அச்சாரமா அல்லது திமுக-விடம் கூடுதல் தொகுதி கேட்பதற்கான நிர்பந்தமா என, அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் ‘ஜனநாயகன்’ பட தணிக்கை விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இதை வைத்து பார்க்கும்போது, சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணையுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அல்லது, திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்பதற்கான நிர்பந்தமாக இது அமையுமா, என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த மாத இறுதியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வர இருக்கின்றனர். அந்த நேரத்தில், தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

















