திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன வெங்கடாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன்கள் முத்துக்குமார் மற்றும் திருமலை.
இவர்களுக்கு அதே பகுதியில் தன்னுடைய தந்தை வழி சொத்தில் சுமார் மூன்று ஏக்கருக்கு மேல் உள்ள நிலத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி பெற்று வந்த ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி நவீன் தன்னுடைய மெத்தன போக்கால் யாரோ ஒரு சிலரை திருப்தி படுத்த வேண்டும் என்று ஊர் முழுக்க இருக்கின்ற கால்வாய் கழிவு நீர் மற்றும் சாக்கடைகளை தன்னுடைய விவசாய நிலத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டதினால் நாங்கள் விவசாயம் செய்யும் நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் கெட்டுப் போய் கழிவு நீராக மாறி உள்ளது.
இந்த நீரை பயன்படுத்தி தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத காரணத்தினால் குழந்தை குட்டியுடன் நாங்கள் விவசாயம் செய்ய ஏதுவாக எங்கள் நிலத்தை மீட்டுக் கொடுங்கள் என கோரிக்கையை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த மனு சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று கால்வாய் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பம் புலம்பிய சம்பவம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மனு குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடுத்தக்கது.
