இந்தா பிடி 3000 ரூபாய் – பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடக்கம்

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக, மாநிலத்தில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 171 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இந்த பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்பை, பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Exit mobile version