கிராமபுற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் கோலாகலம் போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் தமிழக முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்
தமிழரின் பண்பாட்டு அடையாளமாக வியங்கும் பொங்கல் திருநாளை கழகத்தின் சார்பில் திராவிடபொங்கல் என்ற பெயரில் சமூக நீதிக்கான கொண்டாட்டமாக முன்னெடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட ஆட்சியில் தமிழக முழுவதும் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கிழக்கு ஒன்றியம் மற்றும் கூத்தாநல்லூர் நகரம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது திறமையை நிலைநாட்டினர். இன்றைய விளையாட்டு போட்டியில் கபாடி, மிதிவண்டி போட்டி, கோ கோ, கைப்பந்து, கிரிக்கெட், ஓட்டபந்தைய போட்டி, முதலான பல்வேறு போட்டிகளில் ஏராளமான ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் கௌரவிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் பங்கு கொண்ட விளையாட்டு வீரர்கள் கிராமபுற இளைஞர்களை விளையாட்டு துறையி்ல் ஊக்கவிக்கும் வகையில் திராவிட பொங்கல் விளையாட்டு போட்டியை அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

















