பொங்கல் திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் 34 ஆயிரத்து 87 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை, சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், கூடுதலாக 10 ஆயிரத்து 245 சிறப்பு பேருந்துகள் என 6 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 22 ஆயிரத்து 797 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறினார்.
பிற நகரங்களில் இருந்து மேற்கண்ட நாட்களில் 11 ஆயிரத்து 290 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோன்று பண்டிகை முடிந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 15 ஆயிரத்து 188 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சிவசங்கர் தெரிவித்தார்.

















