புதுக்கோட்டை அருகே பள்ளத்திவயல் பகுதியில் பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு வந்தார். பொது கூட்ட மேடைக்கு வந்த அவருக்கு பிஜேபியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் பேசிய அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்.அதிமுக-பிஜேபி கூட்டணி இயல்பாக அமைந்த கூட்டணி என்றும் தெரிவித்தார்.திமுக ஆட்சியை எப்பாடுபட்டாவது அகற்றுவோம் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் விமர்சித்தார். மீண்டும் முதலமைச்சர் ஆகும் மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் தெரிவித்தார். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட நேரம் வந்துவிட்டதாக வும் தெரிவித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என்றும் அமித்ஷா சூளுரைத்தார். தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை பிரதமர மோடி அரசு கொண்டு வந்துள்ளதாக அமித்ஷா குறிப்பிட்டார். இந்துக்களின் சம உரிமைகளை திமுக அரசு பறித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.















