இரண்டு நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். திருச்சி விமான நிலையம் வந்த அவருக்கு பிஜேபியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டை அருகே பள்ளத்து விடுதி பகுதியில் பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அந்தமானில் இருந்து திருச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் விடுதியில் பிஜேபி நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து பேசினார். தொடர்ந்து மாலை ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு செல்லும் அமித்ஷா நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

















