கலைஞர் கைவினைத் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.50 இலட்சம் மானியத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் வழங்கினார்கள்.
திருவாரூர் ஜன,07-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு திட்டமான கலைஞர் கைவினைத் திட்ட சாதனையாளர்களின் வெற்றி விழா நடைபெற்றது. அதனடிப்படையில், திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நடைபெற்ற கலைஞர் கைவினைத் திட்ட சாதனையாளர்களின் வெற்றி விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் கலந்து கொண்டு கலைஞர் கைவினைத் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.50 இலட்சம் மானியத்திற்கான ஆணையினை வழங்கினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் இதுவரை 506 நபர்களுக்கு ரூ.163.16 இலட்சம் மானியத்துடன் கூடிய கடன் ஒப்பளிப்பபு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களில் 2025-26 நிதியாண்டில் இதுவரை சிறு தொழில் கடன் திட்டங்கள் மூலமாக 294 பயனாளிகளுக்கு ரூ.5.08 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் பொன்னம்பலம், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் கணபதிசுந்தரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரங்கநாத பிரபு, திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், திருவாரூர் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத்தலைவர் அருண்காந்தி, பொது செயலாளர் பாபு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
