மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை செய்த பட்டியல் அளிக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து அனைத்து ஒப்பந்தக்தாரர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஜே ஜே எம் ஒப்பந்த பணிகள் செய்த வகையில் பட்டியல் அளிக்கப்பட்டு பிடித்தம் செய்த பொது பங்களிப்புத் தொகை மற்றும் முன்வைப்பு தொகையினை திரும்ப தராததை கண்டித்தும் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்த பட்டியல் அளிக்கப்படாமல் உள்ளதை கண்டித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளை கண்டித்து மேலும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை அலட்சியப்படுத்துவதை கண்டித்தும் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த உண்ணாவிரத போராட்டம் ஒப்பந்ததாரர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது . இதில் கோட்டூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்தக்தாரர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

















