மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் 5621 கடையில் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதம் செய்ததால் ஐந்து ருபாய் கொடுக்காமல் 5 ரூபாயை மட்டும் திருப்பி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது அரசாங்கம் உங்களை கூடுதலாக விற்க சொல்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் குவாட்டர் மது பாட்டிலுக்கு முறைகேடாக பத்து ரூபாய் கூடுதலாக காசு வாங்குவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் மது பாட்டிலுக்கு கூடுதலாக முறைகேடாக பத்து ரூபாய் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் 5621 என்ற கடையில் ஒரு நபர் 500 ரூபாய் பணம் கொடுத்து லாமார்ட்டின் குவாட்டர் வாங்கியுள்ளார். லா மார்ட்டின் குவாட்டர் 220 ரூபாயும் பாட்டிலை திருப்பி கொடுக்கும் நடைமுறைக்காக பத்து ரூபாயும் பெறப்படும் நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் முறைகேடாக கூடுதலாக பத்து ரூபாய் எடுத்துக் கொண்டு மீதி பணம் கொடுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தன் செல்போனில் படம் பிடித்தவாறு 500 ரூபாய் பணம் கொடுத்தேன் மீதி பணம் கொடுத்துள்ளீர்கள் அதற்கான கணக்கு என்ன என்று சொல்லுங்கள் ஏன் முறைகேடாக கூடுதலாக பத்து ரூபாய் பணத்தை எடுக்குறீங்க என்று கேள்வி கேட்டு அரசாங்கம் உங்களை கூடுதலாக பணத்தை வாங்க சொல்கிறார்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வீடியோ பதிவு செய்ய கடையில் இருந்த ஊழியர்களும் பதிலுக்கு வீடியோ பதிவு செய்தனர். கூடுதலாக பணம் எடுத்த கடை ஊழியர்கள் ஐந்து ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்தபோது மீதி ஐந்து ரூபாய் யார் கொடுப்பார்கள் என்று கேள்வி கேட்டு முறைகேடுகளை அம்பலப்படுத்தும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.
















