அரசாங்கம் நீதிமன்றத்தை காரணம் காட்டி குடியிருப்பாளர்களையும்.. குத்தகை விவசாயிகளையும், ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வெளியேற்ற துடிக்கிறது என்றும்
சட்டப்படி ஆதீனங்களின் நிலங்கள் பட்டா வழங்குவதற்கு பொருத்தமானது தான் என்று தெரிவித்துள்ளார்.முதலமைச்சரின் தந்தை வளர்ந்து உயர்ந்த மண்ணில் மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது, ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்க விழாவில்.. பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.திருவாரூர் பகுதியில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடிமனை பட்டா இன்றி வாழ்ந்து வரும் மக்களுக்கு தமிழ்நாடு அரசிடம் குடிமனை பட்டா பெறுவதற்கான…’என் நிலம் – என் உரிமை..’ என்ற தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்கப்பட்டது.
தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் தலைவருமான
பி. ஆர். பாண்டியன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் வாழ்த்தி பேசிய பி. ஆர். பாண்டியன்.. “வருமானம் இன்றி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடி மனை பட்டா இல்லாதவர்களுக்கு கோவில் நிலங்களாக இருந்தால் அரசே அதற்கான தொகையை செலுத்தி இலவச பட்டாவை வழங்க வேண்டும்… என்று பேசினார்.மேலும் செய்தியாளர்களிடம்..
“கோவில் குத்தகை நிலங்களை கோவில் சொத்துக்கள் என்கிற பெயரால் நிலவரி ஏற்றம் செய்யக்கூடாது… வருமானமின்றி வாழக்கூடிய ஏழைகளுக்கு நிலம் வாங்கி வீடு கட்ட முடியாமல் போராடிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு வாடகை நினைப்பது எந்த வகையில் நியாயம்… என்றும், முதலமைச்சரின் தந்தை வளர்ந்து உயர்ந்த மண்ணில் மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… என்றும் அரசாங்கம் நீதிமன்றத்தை காரணம் காட்டி குடியிருப்பாலர்களையும்.. குத்தகை விவசாயிகளையும்.. வெளியேற்ற துடிப்பது கார்ப்பரேட் மோகம் கொண்ட அரசு என என்ன தோன்றுகிறது… என பேட்டி அளித்தார்..
தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் சாமிநாதன் வரவேற்பு நிகழ்த்தி.. தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்.. ‘பல்லாண்டுகளாக வீடு கட்டி குடிமனை பட்டா இன்றி வாழ்ந்து வரும் மக்களுக்கு தமிழக அரசிடம் கேட்டு பட்டா வாங்க வேண்டும்…”உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இந்த நிகழ்வில்.. அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கலியபெருமாள்.. தமிழ்நாடு காவிரி விவசாய சங்க மாவட்ட தலைவர் சுப்பையன் செயலாளர் குருமூர்த்தி, மற்றும் கும்பகோணம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பொறுப்பாளர் கந்தவேல் கலந்து கொண்டு வாழ்த்தினர்..
மேலும் சங்கத்தின் செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் சின்ராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டனர்..
