பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

மக்களவை கூடியதும், முன்னாள் எம்.பிக்களின் மறைவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் குறிப்புகளை வாசித்தார். அண்மையில் காலமான நடிகர் தர்மேந்திரா, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளதால், அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்து ஓம் பிர்லா எடுத்துக்கூறினார்.
பின்னர், மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுனம் கடைபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, அண்மையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி, முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளதைப் பாராட்டி ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் நேபாளத்தில் நடைபெற்ற பார்வையற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையையும் இந்திய மகளிர் வென்றிருப்பதற்கும் மக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவை நடவடிக்கைகளை ஓம் பிர்லா தொடங்கு முற்பட்டார். அப்போது எஸ்.ஐ.ஆர், தொழிலாளர் சீரமைப்புச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கைகளில் எழுந்து நின்று வலியுறுத்தினர். அவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் எழுந்த அமளியலாம், நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version