ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி……முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய பகுதி கொட்டையூர் ஊராட்சி  மற்றும் அரவூர் ஊராட்சி  கிளியூர்  பகுதியை சார்ந்த மாற்றுக் கட்சியினர் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன் ஏற்பாட்டில்.. திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும்.. தமிழக முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் தலைமையில்..திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து பெண்கள் உள்ளிட்ட150-க்கும்  மேற்பட்டோர் புரட்சித் தமிழர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையை ஏற்று   'குடும்பம் குடும்பமாக' தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்...கட்சியில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்   அதிமுக வேஷ்டி அணிவித்து..சேலை வழங்கி வரவேற்றார்.
 

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்ததாவது,

"வருகின்ற காலங்களில் அம்மாவின் ஆட்சி வரவேண்டும்.. அம்மாவின் ஆட்சி அமையாததால் அம்மா மற்றும் எடப்பாடியார் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எல்லாம் நாம் இழந்திருக்கிறோம்..ஆயிரம் 1000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா..? ஒரு ஆண்டிற்கு டாஸ்மாக்கின் வருமானம் 48 ஆயிரம் கோடி.. மகளிர் உரிமை தொகைக்கு 8000 கோடி.. மீதமுள்ள 40 ஆயிரம் கோடி மக்களிடம் இருந்து தன் போகிறது.அதிமுக ஆட்சி வந்ததும் இதைவிட கூடுதலாக உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் கூடுதலாக உரிமைத் தொகை தருவதாக முதலமைச்சர் நேற்று கூறியுள்ளார். தேர்தலுக்கு மூன்று மாதம் தான் உள்ளது, 47 மாதமாக என்ன செய்தீர்கள்..? இது ஏமாற்று வேலை… அண்ணா திமுகவிடம் இருக்காது... தாலிக்கு தங்கம், மினி கிளினிக் திட்டத்தை நிறுத்தினார்கள்… இலவச அரிசியை நிறுத்திப் பாருங்கள்… அம்மா கொண்டு வந்த இலவச அரிசியினால்தான் தற்போது பஞ்சம், பசி இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள்..
பால் முதற்கொண்டு எல்லா பொருளும் விலையேறி உள்ளது.. அதையெல்லாம்..தற்போது விலை இல்லா அரிசி காப்பாற்றிக் கொண்டுள்ளது.."என்று பேசினார்.
இந்த நிகழ்வில்.. வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், ஒன்றிய துணை செயலாளர்கள் வாசுதேவன், குரு மாணிக்க ஐயா, அதிமுக மாவட்ட பிரதிநிதி ஹாஜா மொய்தீன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜயகுமார், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சங்கர், இணை செயலாளர் சரவணன், முன்னாள் ஊராட்சி செயலாளர் நடராஜன், கிளைச் செயலாளர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Exit mobile version