தடுப்பு சுவரில் மோதிய பேருந்து – பயணிகள் பலி எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியாவில் பேருந்து விபத்தில் சிக்கியதில், பயணிகள் 16 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. ஜகர்த்தாவில் இருந்து, அருகே உள்ள நகருக்கு, 35 பயணிகளுடன் சென்ற பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவற்றில் மோதியது.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்ற பயணிகள், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, 10 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது

Exit mobile version