வணிக சிலிண்டர் விலை ரூ.10.50 குறைப்பு – வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அதே விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன. இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலை, மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த மாதம், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைந்து, ஆயிரத்து 739 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. 868 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version