அணுமின் உற்பத்தி SHANTHI BILL 2025 மற்றும் மின்சார சட்ட திருத்தம் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற SHANTHI BILL 2025 மற்றும் மின்சார சட்ட திருத்தம் 2025 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு இந்திய மாற்றத்திற்கான அணு ஆற்றலின் நிலைத்த பயன்பாடு மற்றும் முன்னேற்றம் ,அணு மசோதாவை நிகழாண்டு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் மிகுந்த அபாயம் கொண்ட அணு ஆற்றல் துறையை பெருமளவிலான தனியார் மற்றும் அந்நிய முதலீட்டுக்கு திறந்து விட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், மின்சார திருத்த மசோதா 2025- ஐ திரும்ப பெற வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு, ஐஎன்டியுசி மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் பேரவை தலைவர் பொன் நக்கீரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

















