பிரான்சிடம் இருந்து 100 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்சிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கி மேற்கொள்ளும் 9-வது பிரான்ஸ் சுற்றுப்பயணம் இதுவாகும். அங்கு அந்த நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.
அப்போது பிரான்சிடம் இருந்து 100 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். இதன்மூலம் நாட்டின் வான்பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடியும் என உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.

















