கேரளா குருவாயூர் கோவிலில், ரீல்ஸ் பதிவு செய்த யூடியூபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் ஒன்றான குருவாயூர் கோவிலில், ரீல்ஸ் பதிவு செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், யூடியூப் பிரபலமான ஜெஸ்னா செலீம் என்பவர், ஆலயத்தின் மேற்கு பகுதியில் நின்று ரீல்ஸ் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து குருவாயூர் தேவசம்போர்டு புகார் அளித்த நிலையில், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்னா செலீம் என்பவர் மீது குருவாயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















