சென்னை புழலில் முதலமைச்சரால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட விளையாட்டுத் திடல் தொடர்பாக திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
சென்னை புழலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவராஜ் விளையாட்டுத் திடலை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் நேரடியாக சென்று பார்வையிட்டார்
அப்போது அங்கு வந்த மாமன்ற உறுப்பினர் சேட்டு இது தன்னுடைய நிதியில் இருந்து கட்டப்பட்டதாகவும் ஆனால் பெயர் பலகையில் சி எம் டி ஏ நிதியிலிருந்து கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளதாகவும் கேள்வி எழுப்பியதால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகும் அங்கிருந்த இரு கட்சினர் இடையே கடும் வாக்குவாதம் நீடித்தது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்
