கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தச் சம்பவத்தையும், தடுக்கத் தவறிய காவல்துறையின் மெத்தனப் போக்கையும் கண்டித்து கைகளில் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினார்கள்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சரானால் பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.















