ரூ.2 லட்சம் லஞ்சம் – வசமாக சிக்கிய பெண் சார்பதிவாளர் கைது

வீட்டுமனையை பதிவு செய்ய, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, தாம்பரம் பெண் சார் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் பிரவின்குமார். இவர், நெடுங்குன்றத்தில் வாங்கிய 2 ஆயிரத்து 400 சதுர அடி நிலத்தை பதிவு செய்ய, தாம்பரம் சார் – பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சார் – பதிவாளர் ரேவதி, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பத்திரப்பதிவின்போது, 2 லட்சம் ரூபாய் தருவதாகவும், மீதி 8 லட்சம் ரூபாயை, பத்திரம் வாங்கும்போது, தருவதாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவின்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, அவர்களது ஆலோசனைப்படி, லஞ்சம் கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.

Exit mobile version