ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடரில் இருந்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் காயம் காரணமாக விலகினார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் பிக் பாஷ் தொடரில் சிட்னி தண்டர் அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கதாக மாறியுள்ளது. ஏனெனில் இதுவரை எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் பிக் பாஷ் தொடரில் விளையாடியதில்லை.
பிக் பாஷ் தொடர் வரும் டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதால், பங்கேற்கும் அணிகள் தற்போதே அதற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் காயம் காரணமாக பிக் பாஷ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு சிட்னி தண்டர் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததுள்ளது.















