குற்றவழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை முன்னாள் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு. வள்ளியூர் குற்றவியல் நடுவண் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே, திருக்கறுங்குடி பேரூராட்சியில் உள்ள மின்பேட்டரி காணாமல் போன வழக்கில், டிஎஸ்பி சுந்தரேசன் தலைமையிலான போலீசார் 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்த வழக்கு கடந்த 14 வருடங்களாக வள்ளியூர் நடுவன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில், டிஎஸ்பி சுந்தரேசன் ஆஜராக பலமுறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி சுந்தரேசன், தற்போது பணியிடை நீக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

















