விண்வெளியில் சிக்கித்தவிக்கும் வீரர்களை மீட்கும், ஷென்ஷோ-22 என்ற விண்கலத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கடந்த ஏப்ரல் 24-ந் தேதி, ஷென்சோ-20 என்ற விண்கலம், 3 விண்வெளி வீரர்களுடன் அனுப்பப்பட்டது. கடந்த 5-ந் தேதி இந்த விண்கலம் பூமி திரும்ப திட்டமிட்டு இருந்தது. ஆனால் விண்வெளி குப்பை மோதியதால் விண்கலம் சேதமடைந்தது. எனவே அந்த விண்கலம் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து அவர்களை மீட்க, ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச்-2எப் ராக்கெட் மூலம், ஷென்சோ-22 என்ற விண்கலத்தை சீனா அனுப்பி இருக்கிறது.
















