த.வெ.க-வுடன் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் கூட்டணி சேருவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இரண்டு திராவிடக் கட்சிகளும் வேண்டாம், புதியவர் வரவேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்திற்கு இளைஞர்களிடமும், பெண்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பு உள்ளதாகவும், தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் விஜய்தான் அடுத்த முதல்வர் என்று அவர்கள் தெரிவிப்பதாகவும் கூறினார்.
பொங்கலுக்குப் பின்னர், அதிமுக-வில் இருந்து பலரும் த.வெ.க-வில் இணைவார்கள் என்று தெரிவித்த அவர், ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி-யைப் பொருத்தவரை தங்களுடன் கூட்டணி சேருவார்கள் என்றார்.

















